2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

அனிஸ்டஸ் ஜெயராஜாவின் 7 நூல்கள் வெளியீடு

A.P.Mathan   / 2011 நவம்பர் 24 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜாவினால் எழுதப்பட்ட ஏழு நூல்களின் தொகுதியும் இணையத்தள அங்குரார்ப்பணமும் கடந்த சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தெளிவத்தை ஜோசப் தலைமை தாங்கினார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடாதிபதி நா.செல்வக்குமார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார்.

போரும் மனிதனும், மரணம் ஒரு முடிவல்ல, இந்தியாவை நேசிக்கும்வரை, மக்களும் மற்றவர்களும், ஒரு மாமன்னரின் பொற்காலம், எனது தேசம் எனது மக்கள், சின்னச் சின் எண்ணங்கள் ஆகிய ஏழு நூல்களே அன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

www.anistus.com என்ற நூலாசிரியரின் இணையத்தளத்தினை எக்ஸ்பிரஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வர்த்தக அபிவிருத்தி முகாமையாளர் செந்தில்நாதன் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.


  Comments - 0

  • Ramesh Friday, 25 November 2011 12:22 AM

    வாழ்த்துக்கள் ஜெயராஜ் அண்ணா

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .