2021 மே 10, திங்கட்கிழமை

அஜீத் மனைவியாக காஜல்!

George   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் அவரது 57ஆவது திரைப்படத்தில் நாயகியாகி விட்டார் காஜல்அகர்வால்.

 

விஜய், சூர்யா, தனுஷ், பரத், கார்த்தி, விஷால் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து விட்ட காஜல்அகர்வால். இதுவரை அஜீத்துடன் ஒரு திரைப்படத்தில்கூட நடிக்கவில்லை என்ற குறை இனி இல்லாமல் போய்விட்டது.

இந்த திரைப்படத்தில் காஜல்அகர்வால் எந்தமாதிரியான வேடத்தில் நடிக்கிறார் என்பது இரகசியமாக இருந்து வந்த நிலையில், தற்போது அவர் அஜீத்தின் மனைவியாக நடிப்பதாக கூறுகிறார்கள்.

அந்த வகையில் இதற்கு முந்தைய திரைப்படங்களில் துள்ளலான காதல் நாயகியாக வலம் வந்த காஜல், முதன்முறையாக மனைவி வேடத்தில் நடிப்பதால் அழுத்தமான காட்சிகளில் நடிக்கிறாராம்.

அதோடு, அவரை அடக்க ஒடுக்கமான பெண்ணாகவும் காண்பிக்கப்போகிறாராம் சிவா. அந்த வகையில், அஜீத்-காஜல்அகர்வாலுக்கு செண்டிமென்டுடன்கூடிய ரொமான்ஸ் பாடல் ஒன்றையும் வைத்துள்ளாராம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X