2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

அட்லி இயக்கத்தில் தல 58?

George   / 2016 ஜூலை 10 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் அஜீத், சிறுத்தை சிவா இயக்கத்தில் தல57 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளனர்.

இந்தநிலையில், அஜீத்தின் அடுத்த திரைப்படத்தை (தல58) இயக்குநர் அட்லி இயக்கவுள்ளதாக கோடாம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகின்றது.

எனினும் அட்லிக்கு நெருக்கமான நபர்களிடம் இதுபற்றி கேட்டபோது, 'அப்படியொரு வதந்தியை நாங்களும் கேள்விப்பட்டோம்' என்று மட்டும் வாய் திறக்கின்றனர்.

விஜய்யை வைத்து அட்லி இயக்கிய தெறி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும் முன்னர் செய்தி வெளியாகியிருந்தது.

இது தொடர்பில் அட்லி, அதிகாரபூர்வமாக அறிவிக்கும்வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .