2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

இசை புயலின் பிறந்த நாளை கொண்டாடிய ’கோப்ரா’ டீம்!

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் கோப்ரா நடித்து வருகிறார். இவர் ஏற்கெனவே டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியவர்.  

இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.  இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில்  உருவாகி வரும் இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். 

இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்துள்ளது படக்குழு. இதில் விக்ரம்  10க்கும் அதிகமான கெட்டப்களில்  நடிக்கவுள்ளாராம். 

இந்நிலையில் நேற்று பிறந்தநாள்  கொண்டாடிய ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோப்ரா டீம் கேக் வெட்டி மகிழ்ந்துள்ளது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. 

கோப்ரா படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .