George / 2016 மே 25 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜிகிர்தண்டா திரைப்படத்துக்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள திரைப்படம் இறைவி.
விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி, பூஜா, கருணாகரன் நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
பெண்களை முன்னிலைப்படுத்தியுள்ள குடும்ப பாங்கான இந்த திரைப்படம், ஜூன் 3ஆம் திகதி வெளிவருகிறது.
இந்நிலையில், திரைப்படத்தை விளம்பரப்படுத்த புதுமையான முறை ஒன்றை கையாள்கிறார்கள். முச்சக்கரவண்டி ஓட்டுநரின் ஆசனத்துக்கு பின்புறம் சிறிய அளவிலான திரையை பொருத்துகிறார்கள். அந்த திரையில் இறைவி திரைப்படத்தின் டீசரும், டிரைலரும், பாடல்களும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும். பின்னால் அமர்ந்து வரும் பயணிகள் அதனை ரசித்தபடி வரலாம்.
கொஞ்சம் செலவு கூடிய முறையாக இருந்தாலும், டி.வி விளம்பரத்துக்கு கோடிக் கணக்கில் அள்ளிக் கொடுப்பதை ஒப்பிடும்போது இது மிக மிக குறைவு என்கிறார்கள்.
தமிழ் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களில் இதனை பொருத்த இருக்கிறார்கள். இதனை கார்த்திக் சுப்புராஜ் தலைமையில் பாபி சிம்ஹா நேற்று கொடியசைத்து ஆரம்பித்துவைத்துள்ளார்.
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago