2021 ஜனவரி 20, புதன்கிழமை

கரிஷ்மாவுக்கு மீண்டும் கல்யாணம்

Gavitha   / 2016 ஜூலை 19 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹந்தி பட உலகின் முன்னணி கதாநாயகி கரிஷ்மா கபூருக்கு 42 வயது ஆகிறது. கரிஷ்மா கபூருக்கும், தொழில் அதிபர் சஞ்சய் கபூருக்கும் கடந்த 2003ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சமைரா என்ற மகளும், கியான் என்ற மகனும் உள்ளனர். சந்தோஷமாக சென்ற இவர்கள் குடும்ப வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன்பு புயல் வீசியது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர்;.

இந்த நிலையில் கரிஷ்மா கபூருக்கும், தொழில் அதிபர் சந்தீப் தோஷ்னிவாலுக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். இந்த நிலையில், கரிஷ்மா கபூர் தனது காதலர் சந்தீப் தோஷ்னிவாலை 2ஆவத திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணம் மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஹொட்டலில் விரைவில் நடக்கவுள்ளதாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .