2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

'காலா கரிகாலன்’ நட்சத்திரங்கள் அறிவிப்பு

George   / 2017 மே 29 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தனுஷின் தயாரிப்பில் உருவாகும் “காலா கரிகாலன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமானது.

இந்நிலையில், திரைப்படத்தில் நடிக்கும் சகல நடிகர், நடிகை குறித்தத் தகவல்களை வொண்டர்பார் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், “வத்திகுச்சி” திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கறுப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளதால் இந்தத் திரைப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தின்  முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் 40 நாட்கள் நடைபெறும். பின்னர், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் தெரிகிறது.

இரண்டு மாதத்தில் படப்பிடிப்பை முழுவதும் முடித்துவிட்டு அதன் பின்னர் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் ஈடுபட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X