2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

கவினை டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக கவின் தலைமையில் ஒரு ஜாலியான கூட்டணி இயங்கி வந்தது. 

இந்த கூட்டணி பிரச்சினை என்று வரும்போது ஒரே குரலில் பேசியதால் எதிர்த்தரப்புக்கு இக்கட்டான நிலையும் ஏற்பட்டது

நட்புக்கு உதாரணம் என கவின் - சாண்டி, கவின் - தர்ஷன் ஆகியோர் இருந்து வரும் நிலையில் இன்றைய நொமினேஷன் படலத்தில் திடீரென கவினை முகினும், தர்ஷனும் நொமினேட் செய்கின்றனர். 

லொஸ்லியா விவகாரத்தில் கவின் தேவையில்லாத சில வேலைகளை செய்வதாக கவினை நொமினேட் செய்ததற்கான காரணத்தை அவர்கள் தெரிவித்தனர். அதேபோல் கவினை சேரனும் நொமினேட் செய்கிறார். 

இன்றைய முதல் ப்ரமோவில் வந்த காட்சிகளில் மூன்று பேர் கவினை நொமினேட் செய்துவிட்டதால் கவின் நொமினேஷன் படத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஷெரின், வனிதா, லொஸ்லியா, சாண்டி ஆகியோர் யாரை நொமினேட் செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .