2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

காஜல் என்ன செய்தார் தெரியுமா?

George   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் மூன்றாவது திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே பல்கேரியா நாட்டில் நடைபெற்று வருகிறது.

ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய், காஜல்அகர்வால், அக்சராஹாசன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படம் மூலம் முதன்முறையாக அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ள காஜல்அகர்வால், ஆரம்பத்தில் இருந்தே திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது பல்கேரியாவில் நிகழும் கடும் பனிப்பொழிவு குறித்து அங்குள்ள அனைத்து நீர்ப்பரப்புகளும் ஐஸ் கட்டிகளாக உறைந்து போயிருப்பதை நேற்று தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

இந்த தட்பவெட்ப நிலை காரணமாக, இறுதிகட்ட படப்பிடிப்பை அங்கு தொடர முடியாமல் படக்குழு விரைவில் இந்தியா திரும்ப இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .