2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

கிராமத்து பெண்களே ரோல் மோடல்

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுந்தரபாண்டியன், கும்கி, பாண்டியநாடு, குட்டிப்புலி, ஜிகர்தண்டா, மஞ்சப்பை, கொம்பன் என பல படங்களில் கிராமத்து  பெண் வேடங்களில் நடித்தவர் லட்சுமிமேனன். அப்படி நடித்த ஒவ்வொரு படங்களிலுமே அந்த வேடங்களுக்கு அச்சு அசலாக அவர் பொருந்தியும் இருந்தார். இந்த வகையில், கிராமத்து கதைகள் என்றால் 'கூப்பிடு லட்சுமிமேனனை' என்றாகிவிட்டது. தற்போது அவர் விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் கிராமத்து பெண்ணாகவே நடித்துள்ளார்.

கிராமத்து வேடங்களில் நடிப்பது பற்றி லட்சுமிமேனன் கூறுகையில், 'பெரும்பாலும் நான் படப்பிடிப்புகளுக்கு வெளியூர்களில் உள்ள கிராமங்களுக்கே செல்வதால், அங்கு வேடிக்கை பார்க்க வரும் பெண்களிடம் சகஜமாக பழகுவேன். அப்போது அந்த பெண் பேசுவது, பழகுவது, அவர்களின் பாடி லேங்குவேஜ் என ஒவ்வொன்றையும் கவனித்து, அதை எனது நடிப்பில் பிரதிபலித்து வருகின்றேன். அதனால், கிராமத்து படங்களை பொறுத்தவரை எனது ரோல் மாடல் கிராமத்து பெண்கள்தான்;' என்றாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .