2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

’தர்பார்’ வெளியிடும் நாளில் ’பட்டாஸ்’

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக ஜனவரி 9ஆம் திகதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படமும் ஜனவரி 16 ஆம் திகதி தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ திரைப்படமும் வெளியாகும் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனவரி 9ஆம் திகதி ரஜினியின் ‘தர்பார்’படம் ரிலீஸாகும் அதே போது, தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தின் டிரைலரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

அனேகமாக ‘தர்பார்’ ரிலீஸாகும் திரையரங்குகளிலும் ‘பட்டாஸ்’ படத்தின் டிரைலர் திரையிடப்படும் என தெரிகிறது.

ஏற்கெனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் பாடல்கள், மோஷன் போஸ்டர் வரை மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டிரைலரும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். 

விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .