2021 மே 12, புதன்கிழமை

பிரபு ஜோடியான கமல் நாயகி

George   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதல் ரோஜாவே திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு ஹொலிவூட் திரைப்படங்களில் நடித்து வந்த பூஜா குமாரை, விஸ்வரூபம் திரைப்படத்துக்காக கோலிவூட்டுக்கு அழைத்து வந்தவர் கமல்.

அதே திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமலுக்கு ஜோடியாக நடித்த பூஜாகுமார், பின்னர் உத்தமவில்லன் திரைப்படத்தில் நடித்தார்.

வசந்த் இயக்கி வரும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மீன்குழம்பும் மண்பானையும் ஆகிய திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார் பூஜாகுமார்.

இதில் மீன்குழம்பும் மண்பானையும் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கும் காளிதாஸ் ஜெயராமின் அப்பாவாக பிரபு நடித்துள்ளார். அவரது ஜோடியாக பூஜாகுமார் நடித்திருக்கிறார்.

அந்த வகையில், காளிதாஸ் தனது காதலி ஆஷ்னா சாவேரியுடன் டூயட் பாடும்போது, பிரபுவும் தனது இளமை காலத்துக்கு சென்று பூஜாகுமாருடன் டூயட் பாடும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாம்.

மலேசியாவில் இயங்கி வரும் தமிழ் ஹோட்டல் சம்பந்தப்பட்ட இந்த கதையில் மலேசிய பெண்கள் அணிவது போன்ற உடையில் செம கலக்கலாக பூஜாகுமாரை காண்பித்துள்ளனராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .