2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

பொலிவுட் நடிகை ரீமா லகு மாரடைப்பால் மரணம்

George   / 2017 மே 18 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல ஹிந்தி நடிகை ரீமா லகு ( வயது 59) மும்பையில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று இரவு திடீர் என்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

அதிகாலை 1 மணிக்கு அவர், அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதை ​டொக்டர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலை 3.15 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு மும்பை திரை உலக பிரபலங்கள் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .