2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

'மீம்ஸ் போதும் இத பாருங்க...’

George   / 2017 மே 29 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும்“தானா சேர்ந்த கூட்டம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது.

இருந்தாலும், திரைப்படத்தின் முதற்பார்வை போஸ்டர் வெளிவரவில்லை என்பதால் சூர்யா இரசிகர்கள் ஆதங்கத்தில் உள்ளனர். இதனால், கடந்த சில நாட்களாக சூர்யா இரசிகர்கள், விக்னேஷ் சிவனை மீமீஸ் போட்டு சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வந்தனர்.

தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது சமூக வலைத்தளத்தில் சூர்யா “கரம்” விளையாடுவது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, “மீமீஸ் போதும், இன்னும் சில நாட்களில் முதற்பார்வை வெளிவரும் என்று இரசிகர்களை சமாதானம் செய்துள்ளார்.

இதனையடுத்து, திரைப்படத்தின் முதற்பார்வை திகதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, கீர்த்திசுரேஷ், செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், கோவை சரளா, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த்ராஜ், ஆர்ஜே பாலாஜி, சுரேஷ்மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த திரைப்படத்துக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .