2021 ஜனவரி 23, சனிக்கிழமை

மலையாளத்தில் அசத்திய வரு

George   / 2016 ஜூலை 08 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

போடா போடி திரைப்படத்தில் அறிமுகமான போதே முதல் திரைப்படத்திலேயே நன்றாக நடிக்கிறாரே என்ற பாராட்டைப் பெற்றவர் வரலட்சுமி சரத்குமார். 

அதன் பின் விஷால் ஜோடியாக மதகஜராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் முடிந்து சில ஆண்டுகள் ஆகியும் இன்னும் திரைக்கு வராமலே இருக்கிறது. 

இதனிடையே பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை திரைப்படத்தில் சூறாவளி என்ற கரகாட்டப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவனிக்க வைத்தார். ஆனால், தமிழ் இயக்குநர்களின் பார்வை வரலட்சுமி மீது படவில்லை.

மலையாள அறிமுக இயக்குநரான நிதின் ரெஞ்சி பணிக்கர், மம்முட்டி நாயகனாக நடித்துள்ள கசாபா திரைப்படத்தின் மூலம் மலையாளத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். 

நேற்று வெளியான இத்திரைப்படம் மலையாள இரசிகர்களின் வரவேற்பைப் பெற்று முதல் நாளிலேயே வெற்றி என்று சொல்லுமளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது.

வரலட்சுமின் மிரட்டலான நடிப்பைப் பார்த்து மலையாளத்து ரசிகர்கள் பாராட்டித் தள்ளி வருகிறார்கள். 

மம்முட்டி நடிக்கும் திரைப்படம் என்றாலே நடிப்பில் மற்றவர்களைத் தூக்கி சாப்பிட்டுவிடுவார். ஆனால், மம்முட்டிக்கே சவால் விடும் கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்திருக்கிறார் என வெளிவரும் விமர்சனங்களும் வரலட்சுமியைப் பாராட்டி வருகின்றன. 

தமிழில் கிடைக்காத பாராட்டுக்கள் வரலட்சுமிக்கு நிறையவே கிடைத்து வருகிறது. மலையாளத்திலிருந்துதான் நடிகைகள் இங்கு வந்து அசத்துவார்களா என்ன?, இதோ தமிழிலிருந்து மலையாளத்துக்குச் சென்று அசத்தியுள்ளார் வரலட்சுமி.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .