2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

’மாஸ்டர்’ முக்கிய தகவலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

Editorial   / 2020 ஜனவரி 05 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி மற்றும் ஷிமோகா ஆகிய பகுதிகளில் முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படம் குறித்து தகவல் வெளியிட்டார்.

கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதி அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்றும், இன்னும் 10 நாட்களில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

விஜய் மற்றும் விஜய்சேதுபதி சேர்ந்து நடிக்கும் காட்சி படக்குழுவினருக்கே மிகவும் பிரமிப்பாக இருக்கும் என்றும் இந்த படப்பிடிப்பை மிகவும் எதிர்பார்ப்பதாகவும் இப்போதைக்கு இந்த படம் குறித்து இவ்வளவு தான் சொல்ல முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் ’மாஸ்டர்’ படம் குறித்த இந்த தகவலை கூறியதும் அங்கிருந்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--