George / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலையாளத்தில் வெளியான “பிரேமம்” திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி, மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டார்.
அதையடுத்து, மணிரத்னத்தின் “காற்று வெளியிடை” திரைப்படத்தில் நடிக்கயிருந்தார். ஆனால் கோல்ஷீட் பிரச்னை காரணமாக விலகிவிட்டார்.
இந்த நிலையில், தற்போது வாலு திரைப்பட இயக்குநர் விஜயசந்தர், விக்ரமை நாயகனாக வைத்து இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க சாய் பல்லவி தற்போது ஒப்பந்தமாகிவிட்டார்.
இந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன், சாய்பல்லவி ஆகிய மூன்று பேரிடமும் பேச்சுவார்த்தை நடந்தது.
கீர்த்தி சுரேஷ் முதல் சுற்றிலேயே கால்சீட் இல்லை என கழன்று கொண்டார். அதையடுத்து மஞ்சிமாமோகன், அந்த திரைப்படத்தில் நடிக்க முயற்சி எடுத்தார். அவருக்குத்தான் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் “பிரேமம்“ திரைப்படத்தில் சாய் பல்லவியின் நடிப்பைப்பார்த்த விக்ரம், இந்த திரைப்படத்தில் அவர்தான் நடிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தாராம்.
அதையடுத்து நடந்த பலசுற்று பேச்சுவார்த்தைக்குப்பிறகு இப்போது சாய் பல்லவியை விக்ரமுக்கு ஜோடியாக்கி விட்டனர்.
மேலும், அவரிடம் ஜனவரியில் கோல்ஷீட் கேட்டபோது, பெப்ரவரியில்தான் தர முடியும் என்றாராம். அதனால் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஜனவரியிலேயே படமாக்கும் இயக்குநர் விஜயசந்தர், விக்ரம்-சாய் பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகளை பெப்ரவரியில் படமாக்க முடிவு செய்துள்ளாராம்.
முன்னதாக விக்ரம் வயதில் மூத்தவராக நடிப்பதால் அவருடன் நடிக்க சாய்பல்லவி மறுத்தாக செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago