A.P.Mathan / 2011 மார்ச் 31 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
தன் உடலை வருத்தி நடிக்கின்ற நடிகர்கள் ஒருசிலரே தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். ஆரம்ப காலத்தில் கமல்ஹாஸன் தனது பாத்திரங்களுக்கு ஏற்றாற்போல் தன் உடலமைப்பை மாற்றியமைத்து ரசிகர்களுக்கு விருந்து படைப்பித்து வந்தார். அதனைத் தொடர்ந்து சூர்யா, விக்ரம் என பலரும் இதே பாணியை பின்பற்றத் தொடங்கினர்.
குறிப்பாக நடிகர் சூர்யா தனது படங்களில் தொடராக பல சாதனைகளை புரிந்து வந்திருக்கிறார். 'வாரணம் ஆயிரம்' படத்தில் இளமை முதல் முதிர்வுவரை உடலை வருத்தி சூர்யா நடித்திருந்ததை யாரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.
அதேபோன்று அந்நியன் படத்தில் மூன்று வெவ்வேறு பாத்திரங்களை ஒன்றிணைத்து விக்ரம் நடித்திருந்ததையும் யாரும் எளிதில் மறந்துவிடமாட்டார்கள்.
மீண்டும் அதே விக்ரம் 18 வயது வாலிபனாக நடிக்கவிருக்கிறார் என்ற இனிப்பான செய்தி - ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது. 'வாரணம் ஆயிரம்' படத்தில் சூர்யா இளவயது பையன்போல் நடித்திருப்பாரே... அதே பாணியில்தான் விக்ரமும் நடிக்கவிருக்கிறாராம். விஜயின் இயக்கத்தில் 'தெய்வ திருமகன்' படத்திற்காகவே 18 வயது வாலிபனாக வலம்வர இருக்கிறார் விக்ரம்.
'தெய்வ திருமகன்' படத்தில் விக்ரமின் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். உதவியாக அமலா பௌல், நகைச்சுவைக்காக சந்தானம் இணைந்திருக்கிறார். 18 வயது விக்ரமை பார்க்க இப்பொழுதே ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்...
.jpg)
.jpg)
16 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
rekha roshan Thursday, 09 June 2011 09:49 PM
எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்
Reply : 0 0
dhinesh Friday, 09 December 2011 10:50 PM
ரியல்ஹீரோ
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago