2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

கோலிவூட் மோகத்தில் அமிர்தாப்பச்சான்

A.P.Mathan   / 2010 ஜூலை 09 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பைத் திரையுலகின் ஜாம்பவானாகத் திகழும் அமிர்தாப் பச்சான், தமிழ் படங்களில் நடிப்பதற்கு தனக்கு விருப்பமிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

மலையாளத் திரைப்படமான கந்தஹாரில் அவர் இப்பொழுது நடித்துவருகிறார். இந்நிலையிலேயே தமிழ் திரையுலகிலும் நடிக்கும் ஆசையை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ''தமிழ் திரையுலகு எனக்கு ஒன்றும் புதிதில்லை. இருப்பினும் தமிழ் திரைப்படத்தில் நடிப்பதென்பது புது அனுபவம்தான். ஆகையினால் நல்ல கதையம்சம் கிடைக்குமானால் நான் தமிழ் படங்களில் நடிப்பதற்குத் தயாராகவே இருக்கிறேன்'' என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

''கலைக்கு மொழி ஒரு தடையாக இருக்கப்போவதில்லை. மலையாளப் படத்தில் நடிக்கின்ற எனக்கு தமிழ் படங்களில் நடிப்பதொன்றும் பெரிய விடயமாக இருக்கப்போவதில்லை...'' எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே கூடியவிரைவில் அமிர்தாப்பச்சனை தமிழ் சினிமாவிலும் காணக்கூடிய வாய்ப்பு இருக்கிறது...

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--