2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

ஷகீராவிடம் மயங்கிய ஷாருக்கான்

Super User   / 2010 ஜூலை 13 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொலிவூட் நட்சத்திரமான ஷாருக்கானுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அவரோ, கொலம்பிய பாடகி ஷகீராவின் அழகில் மயங்கிக் கிடக்கிறார். இதைக் கூறியவர் வேறு யாருமல்லர். ஷாருக்கானே தனது ட்விட்டர் இணையப் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவில் உலகக்கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளைப் பார்வையிடப் சென்றபோது ஷகீராவை தனது குடும்பத்தினருடன்  நேரில் சந்தித்ததுள்ளார் ஷாருக்.

44 வயதான ஷாருக்கான் தனது மனைவி கௌரி, மகன் ஆர்யா மற்றும் மகள் சுஹானா ஆகியோர் சகிதம் ஷகீராவை சந்தித்தாராம்.

அந்த அனுபவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள அவர், ஷகீராவின் அழகை புகழ்ந்து தள்ளியள்ளார்.

"உண்மையாவே ஷகீரா அழகும் அன்பும் மிகுந்தவர். குழந்தைகளுடன் அவர் மிக இனிமையாகப் பேசினார். எனது பெயரை மிக இனிமையாக அவர் உச்சரித்தார். நாம் வாழ்க்கை முழுவதும் ஷகீராவின் விசிறிகளாக இருப்போம். உங்கள் அன்புக்கு  நன்றி"  என எழுதியுள்ள ஷாருக்கான், ஷகீராவுடன் தனது குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றையும் வெளியிட்டுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--