2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

தொடங்கியது விஜயின் வேலாயுதம்

A.P.Mathan   / 2010 ஜூலை 16 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


தொடர் தோல்விகளால் அல்லல்படும் நடிகர் விஜய்க்கு அல்வா சாப்பிட்டதுபோல் இனிப்பான செய்தி கிடைத்திருக்கிறது. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான 'ஆஸ்கார் பில்ம்ஸ்' (முன்னர் 'ஒஸ்கார் பில்ம்ஸ்' என்று இருந்தது. தசாவதார பாடல் வெளியீடு ஹொலிவூட் வரை பேசப்பட்டதால் ஒஸ்கார் விருது வழங்கும் அமைப்பு தடைவிதித்தது. அதன் பின்னர் ஆஸ்கார் என்று மாற்றிவிட்டனர்) தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் படம் வேலாயுதம். இந்த வேலாயுதத்திற்கு கதாநாயகன் விஜய். கதாநாயகி ஜெனிலியா. விஜயுடன் இரண்டாவது தடவையாக இசையால் இணைகிறார் விஜய் ஆண்டனி.

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் என்று அறிமுகமாகியதால் வேலாயுதம் திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வினையும் மிகவும் பிரமாண்டமாகவே நடத்தியிருக்கிறார்கள். விஜய் ரசிகர்கள் சுமார் 20 ஆயிரம்பேர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருக்கிறார்கள்.

இந்தப்படமாகவது விஜய்க்கு மறுவாழ்வு தருமா என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.  Comments - 0

 • shafi Thursday, 26 August 2010 02:18 PM

  கம் ஒன் விஜய்

  Reply : 0       0

  மயூரேசன் Friday, 16 July 2010 06:52 PM

  கந்தசாமி ரீமேக்காக இருக்குமோ??

  Reply : 0       0

  fanaa Wednesday, 21 July 2010 01:31 AM

  மயூரேசன்..... வேலாயுதம் தூள் கிளப்புவான்டா.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .