2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

இந்திராகாந்தி ஆகிறார் பிரியங்கா சொப்ரா

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக தயாரிக்கவுள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான கிருஷ்ணா ஷா இப்படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறார். இப்படத்தில் இந்திராகாந்தியாக நடிக்கவிருக்கிறார் பிரபல பொலிவூட் நடிகை பிரியங்கா சொப்ரா.

இந்திரா காந்தி, இந்தியாவின் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அவர் ஆற்றிய சேவைகள், போட்ட திட்டங்கள், உலக தலைவர்களுடன் மேற்கொண்ட சந்திப்புகள் என பல விடயங்களை இத்திரைப்படத்தினூடாக வெளிக்கொணரவிருக்கிறார்கள். இந்திரா காந்தி படப்பிடிப்பு வெகுவிரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஏனைய நடிகர்களின் தெரிவுகள் இடம்பெற்றுவருவதாகவும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணா ஷா தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்திரா காந்தி குடும்பத்திடமும் இத்திரைப்படம் எடுப்பது குறித்து தெரிவித்து முன்னனுமதி வாங்கிவிட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திரா காந்தியாக நடிக்கக் கிடைத்ததில் பெரிதும் பூரிப்படைந்துள்ளதாக நடிகை பிரியங்கா சொப்ரா குறிப்பிட்டிருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .