2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

போர்முலா வன் காரில் சீயான் விக்ரம்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

போர்முலா வன் சம்பியன் லெவிஸ் ஹெமில்டன் இந்தியா வந்திருந்தவேளையில், தனியார் நிறுவனமொன்றின் அனுசரணைக்காக இடம்பெற்ற கண்காட்சி கார் பந்தயத்தில் நடிகர் விக்ரம் கார் பந்தய தடத்தில் ஹெமில்டனுடன் இரண்டு சுற்று சுற்றி வந்திருக்கிறார்.

எப்போதும் கடினமான சவால்களை அதிகம் விரும்புகின்ற நடிகர் விக்ரம், போர்முலா வன் காரில் பயணித்த அனுபவம் பற்றி குறிப்பிடும்போது… ‘இது உண்மையிலேயே மறக்கமுடியாத அனுபவம். மணித்தியாலத்திற்கு 170 கிலோமீற்றர் என்ற வேகத்தில் ஹெமில்டன் காரினை ஓட்டுகின்றபோதும் அவர் தனது காதலியுடன் எதிர்கால வாழ்க்கைபற்றி சுவாரஸ்யமாக பேசுகின்றார். இவர்களுக்கு அந்த வேகம் சர்வசாதாரணமாக இருக்கின்றது' என்று குறிப்பிட்டார்.

அஜித்குமாரினைப்போல் நடிகர் விக்ரமும் கார்ப்பந்தயங்களில் தொடர்ந்து கலந்துகொள்வாரோ தெரியவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--