2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கல்யாணம் இப்ப வேண்டாம்: பாவனா

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இப்போதைக்கு கல்யாணம் பற்றி சிந்திப்பதற்கு எனக்கு நேரம் இல்லை. கைவசம் ஏராளமான படங்கள் இருப்பதால் இரண்டு வருடங்களுக்கு கல்யாணம் பற்றி சிந்திக்க முடியாது என நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் சித்திரம் பேசுதடி படம்தான் பாவனாவுக்கு கை கொடுத்தது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து புகழெடுத்த பாவனா இப்பொழுது தெலுங்கு, கன்னடா, மலையாளம் என அனைத்து மொழி படங்களுக்குமாக பறந்து திரிகிறார்.

இந்நிலையில் பாவனாவுக்கு திருமணமாம் என வந்த செய்தியை பற்றி அவரிடம் கேட்டபோதே இவ்வாறு பதிலளித்துள்ளார். ஜாக்கி என்னும் கன்னட படம் அடுத்த மாதம் வெளியாகிறது. அதேபோல் 'விஷ்ணுவர்த்தனா' என்னும் கன்னட படமும் வெளிவருவதற்கு தயாராக இருக்கிறது. ஆகையினால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் பாவனா வானத்தில் ரெக்கைகட்டி பறக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--