A.P.Mathan / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

'எந்திரன்' திரைப்படம் உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்டு சக்கைபோடு போடுகிறது. நீண்ட எதிர்பார்ப்புக்குப்பின் 'எந்திரன்' வெளிவந்திருப்பதால் திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் 'எந்திரன்' திரைப்படத்தின் விளம்பரத்திற்காக எந்திரனாக உருவாக்கப்பட்ட 'சிற்றி' என்னும் இயந்திர மனிதனை கலிபோர்னியா ஸ்டூடியோவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவருகிறார்கள். இந்த நிஜ எந்திரனிடம் கேள்விகள் கேட்கலாம், நடனம் ஆடிக் காட்டும், சண்டை போட்டுக் காட்டும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருக்கிறார்.
பெரும் பொருட்செலவில் உருவாகிய எந்திரனின் வருவாய்க்கு பாதிப்பில்லாமல் இருக்க விளம்பரத்திலும் கவனம் செலுத்துகிறார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். அந்தவகையில்தான் நிஜ எந்திரனையே இந்தியாவுக்கு வரவழைத்திருக்கிறார்கள்.
21 minute ago
47 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
47 minute ago
56 minute ago