2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

புலி வேஷம் போடும் சதா...

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழில் பல ஹிட் படங்களைத் தந்தவர் சதா. ஆனால் அந்நியன் மற்றும் உன்னாலே உன்னாலே படங்களுக்குப் பிறகு தமிழ் திரையுலகிலிருந்து  காணாமல் போயிருந்தார். இந்திப் படங்களில் நடிப்பதாக செய்திகள் வந்த நிலையில் சில வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் புலிவேஷம் போட வந்துள்ளார் சதா.

இந்நிலையில், இந்திப் படங்களில் நடிக்கச் சென்றதால் தமிழ் உட்பட தென்னிந்திய திரைப்படங்களுக்கான வாய்ப்பினை இழந்துவிட்டேன் என்று கவலை தெரிவித்துள்ளார் சதா.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது :- "தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் எடுக்கப்பட்ட ஜெயம் திரைப்படம் ஹிட்டானதை அடுத்து  அதிக பட வாய்ப்புகள் வந்தன. இதில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக நடித்த அந்நியன் தென்னிந்திய மொழிகளில் என்னை மேலும் அடையாளம் காட்டியது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 20 படங்களில் நடித்துவிட்டு இந்தி படங்களில் நடிக்க முடிவு செய்தேன். லவ் கிச்சடி, கிளிக் படங்களில் நடித்துள்ளேன. இந்த படங்கள் சரியான நேரங்களில் வெளியாகவில்லை.

படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகி இழுத்துக்கொண்டே சென்றன. எனது கால்ஷீட்டும் வீணானது. ஒப்பந்தப்படி, இந்த படங்களை முடித்துவிட்டுதான் அடுத்த படங்களில் நடிக்க வேண்டும் என்ற விதி இருந்ததால் பல வாய்ப்புகளை இழக்க வேண்டியேற்பட்டது.

இதற்காக யாரையும் குற்றம் சொல்லவில்லை. இப்போது தமிழில் புலி வேஷம் படத்தில் நடித்து வருகிறேன். இந்தியில் கல்பாலி, கன்னடத்தில் மல்லரி, துண்டா துண்டி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறேன் என்றுள்ளார் சதா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .