A.P.Mathan / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகின் முன்னணி விருதென கருதப்படும் ஒஸ்கார் விருதினை வென்றெடுத்த ஒலிக்கலவை பொறியியலாளர் (சவுன்ட் என்ஜினியர்) ரசூல் பூக்குட்டி மற்றுமொரு அவதாரத்தினை எடுக்கவிருக்கிறார். இந்தியாவின் முன்னணி நட்சத்திரமான அமிர்தாப்பச்சனை வைத்து படமொன்றினை இயக்கும் திட்டத்திற்கு தயாராகி வருகிறார் ரசூல் பூக்குட்டி.
இந்த திரைப்படம் பற்றி ரசூல் பூக்குட்டி குறிப்பிடுகையில்... 'நீண்டகாலமாக இப்படத்திற்கான கதையினை எழுதி வருகிறேன். அமிர்தாப்பச்சனை மனிதில் வைத்துத்தால் திரைக்கதையினை எழுதத் தொடங்கினேன். இப்பொழுது அவரை வைத்தே படத்தினை இயக்கும் காலமும் கனிந்திருக்கிறது. இப்பொழுதே அப்படம் பற்றி எதையும் பேச விரும்பவில்லை. அடுத்த வருடம் இந்த கதையினை படமாக்கவிருக்கிறேன். இது தகப்பனுக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் பாசம் போராட்டம் சம்பந்தப்பட்ட கதை...' என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியில் இசை மூலம் அறியப்பட்ட ரசூல் பூக்குட்டி, இயக்குநர் அவதாரத்தின் மூலமாகவும் உலகளாவிய ரீதியில் பேசப்படுவாரென பொலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


57 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
4 hours ago