2020 நவம்பர் 25, புதன்கிழமை

இயக்குநர் பாலாவின் புதிய நாயகி

A.P.Mathan   / 2010 நவம்பர் 03 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இயக்குநர் பாலா என்றாலே 'புதுமை' என்று அர்த்தப்படுமளவுக்கு அவரது படங்கள் அமைந்துவிடுவதொன்றும் ஆச்சரியப்படுவதற்குரிய விடயமல்ல. நாயகர்களை சில வருடங்கள் புளிந்தெடுப்பதும், நாயகிகளை அடிக்கடி மாற்றிக்கொள்வதும் பாலாவின் படங்களில் சகஜயம்.

அந்தவகையில் இயக்குநர் பாலா இயக்குகின்ற 'அவன் இவன்' படத்தில் விஷால் முக்கிய வேடத்தில் வித்தியாசமாக நடிப்பது பற்றி ஏற்கனவே பல செய்திகளை பார்த்துவிட்டோம். மற்றைய நாயகன் ஆர்யாவுக்கும் முக்கியமான வேடமொன்று இருக்கிறது. நடிகர் சூர்யாவும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக ஜனனி ஐயர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மற்றுமொரு நாயகியையும் இயக்குநர் பாலா தேர்ந்தெடுத்திருக்கிறார். தெலுங்கு நடிகை மது ஷாலினியை 'அவன் இவன்' படத்தின் மூலமாக தமிழில் அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர் பாலா.

பெரும் பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அற்புதமான பாடல்களை உருவாக்கியிருப்பதாக படப்பிடிப்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0

 • Cyclone Monday, 08 November 2010 02:08 AM

  பாலா! நீ எனை போன்ற பச்சிளம் பாலகர்களை பாழாக்குவது என்று முடிவோடு இருக்கிறாயா? எங்கேடா புடிச்சே இந்த .....யை?

  Reply : 0       0

  Nafar Tuesday, 09 November 2010 09:11 PM

  பச்சிளம் பாலகர்களுக்கு இது எல்லாம் தெரயுமா?

  Reply : 0       0

  xlntgson Thursday, 18 November 2010 08:32 PM

  'பச்சிளம்' என்றால் பதினாறு வயதா? சூப்பியில்லாமல் பால் குடிக்க இயலாதா?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--