Menaka Mookandi / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

"கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை நான் செய்வதில்லை" என்று பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். இருப்பினும் இது வெறும் பேச்சு மாத்திரமே. யார் தான் அவ்வாறு கோடி ரூபாவினை அல்லிக்கொட்டப் போகிறார்கள் எனும் கேள்வியும் எம் மனதில் இருக்கத்தான் செய்கிறது.
ஆனால் உண்மையிலேயே 'ஒரு கோடிக்கும் மேல் சம்பளம் தருகிறோம்' என்று கூறியும் அது தனக்கு தேவையில்லை என்று கூறியுள்ளார் நடிகை த்ரிஷா.

தெலுங்குப் படங்களில் வாய்ப்பு என்றால், கையிலிருக்கும் தமிழ்ப் படங்களைக் கூட அம்போவென விட்டுவிட்டு ஓடுகிறார்கள் நடிகைகள். ஆனால் த்ரிஷாவோ, தெலுங்கில் கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பை மறுத்துவிட்டிருக்கிறார்.
காரணம்? அது விலைமாது கதாபாத்திரமாம்! இந்த கதாபாத்திரத்துக்காக த்ரிஷாவுக்கு ஒரு கோடிக்கும் மேல் சம்பளம் தரத் தயாராக இருந்தார்களாம். ஆனால் தனது முடிவில் தீர்மானமாக உள்ளார் த்ரிஷா.
இதுபற்றி திரிஷா கூறியுள்ளதாவது, 'விலைமாது கதாபாத்திரம் என்பது மிகவும் சவால் நிறைந்தது. எளிதாக அதில் நடிக்க முடியாது. எனவேதான் அந்த வேடத்தில் நடிக்க நான் மறுத்து விட்டேன்.

விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவுக்கு எனக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது இதற்கு முன் எந்த நடிகையும் அதுமாதிரி நடிக்கவில்லை என்று பெயர் எடுக்க வேண்டும். வேறு நடிகைகளும் இந்த நடிப்பை பார்த்து பயப்பட வேண்டும். அப்படியொரு துணிச்சல் வரும்போது நடிப்பேன்.
கமலுடன் நடித்த மன்மதன் அம்பு படம் எதிர்வரும் 17ஆம் திகதி வெளியாகிறது. கமலுடன் நடிக்கும் முதல் படம் என்பதால் மிகவும் பயந்தேன். படப்பிடிப்புக்கு போகும் போதெல்லாம் எனது முதல் படத்தில் வேலை செய்த உணர்வே ஏற்பட்டது.
நடிகர், நடிகைகள் பற்றி கிசுகிசுக்கள் வருவது தவறல்ல. கிசுகிசுக்கள் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே அவை பற்றி வருத்தப்படக் கூடாது. ஆனால் சில நடிகைகள் தங்களை பற்றிய கிசுகிசுக்களை தாங்களே பரப்பி விளம்பரம் தேடுகின்றனர். அதுதான் தவறு. நான் அப்படியானவள் அல்ல' என்று கூறியுள்ளார் த்ரிஷா.







7 minute ago
21 minute ago
37 minute ago
xlntgson Tuesday, 07 December 2010 09:21 PM
ஒரு கோடிக்கு மேலே தேட இயலாதே அதில் போனால்.
தனது பெருமை (இமேஜ்) நன்றாக இருந்தால் கோடி கோடியாக உழைக்கலாமே, என்ன!
அந்த பலான சங்கதிகள் எல்லாம் கிழவிகளுக்கல்லவா!
Reply : 0 0
yarro oruvan Thursday, 09 December 2010 02:57 AM
நடிக்க முடியாது என்று சொல்லவில்லை,அதில் இன்னும் அனுபவம் போதாது என்று தான் சொல்கிறார் த்ரிஷா. இங்கு பணம் ஒரு பிரச்சினை தெரியவில்லை .
Reply : 0 0
xlntgson Thursday, 09 December 2010 09:34 PM
yaaro oruvan, நக்கலா?
பாவத்தை தேடிக்கொள்ளாதீர்கள்!
நடிகைக்கு ஒரு நீதி குடும்பப் பெண்ணுக்கு ஒரு நீதி என்றில்லை.
ஒரு பெண்ணுக்கு பணத்தைக்காட்டி கற்பை விலைபேசுகின்றவர்கள் அவள் அனுபவசாலி என்றால் -இந்த விடயத்தில்-ஒரு போதும் அவளை மதிக்க மாட்டார்கள்.
அவளை விபசாரி என்று பட்டம் சூட்டி தீண்டத்தகாதவளாக கருதுவார்கள்.
கவனிக்கவும்: தீண்டாமை ஒழிப்பு சட்டம் இங்கு எடுபடாது!
என்றாலும் நீங்கள் நகைச்சுவைக்காக சொன்னீர்கள் என்று கொள்கின்றேன்!
marginal utility- என்று கூறுவார்கள் உண்பது தின்பது போன்றவை சுவை வேக இழப்பு?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
37 minute ago