2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

பொங்கலுக்கு வருகிறது 'சிறுத்தை'

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அண்ணனைப்போலவே தனது வித்தியாசமான நடிப்பினால் குறுகிய காலத்தில் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற நடிகர் கார்த்தி என்றால் அது மிகையாகாது. கார்த்தியின் நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறுத்தை' திரைப்படம் தைப்பொங்கலன்று வெளிவரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'விக்ரமாகுடு' என்னும் தெலுங்கு படத்தின் ரீமேக் வடிவமாகவே உருவாகியிருக்கிறது 'சிறுத்தை'. தெலுங்கில் ரவி தேஜாவின் நடிப்பில் சக்கைபோடு போட்ட படம்தான் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. ஆகையினால் சிறுத்தைக்கு இப்பொழுதே நல்ல எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

ரூடியோ கிறீனின் தயாரிப்பில் உருவாகும் 'சிறுத்தை' படத்தை இயக்குநர் சிவா இயக்குகின்றார். கார்த்திக்கு ஜோடியாக தமன்னா படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார் என படப்பிடிப்பு குழுவினர் குறிப்பிடுகின்றனர். இப்படத்தில் மற்றுமொரு சிறப்பம்சம் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் முதன்முதலாக நடிக்கிறார் என்பதுதான். இரண்டு பாத்திரங்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அழகாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆட்டம், பாட்டு, சண்டை, காதல் என அனைத்தும் உள்ளடங்கிய பொங்கல் விருந்தாக 'சிறுத்தை' இருக்குமென இயக்குநர் தரப்பு நம்பிக்கை வெளியிட்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம், கார்த்தியின் பொங்கல் பரிசு எப்படி இருக்கிறதென்று...


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--