A.P.Mathan / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
தமிழ் சினிமாவினை பொறுத்தமட்டில் இளம் நாயகர்கள் படங்களில் மோதிக்கொண்டாலும் வெளியில் நல்ல நண்பர்களாகவே இருக்கிறார்கள். இது அந்தக்கால நடிகர்களுக்கும் பொருந்தும். வெளியிலுள்ள அவரவர் ரசிகர்கள்தான் தங்களுக்குள் மோதிக்கொள்கிறார்கள்.
அந்தவகையில் இரு பிரபல்யமான நாயகர்களின் படங்களை ஒரே நேரத்தில் வெளியிடுவதையும் இவர்கள் தடுத்துக்கொள்வதுண்டு. காரணம் வசூலுக்கு பாதகமாக அமைந்துவிடும் என்பதால். இதுவொரு நல்லெண்ண அடிப்படை ஒப்பந்தமாகும். இருப்பினும் ஒருசிலர் ஏட்டிக்கு போட்டியாக எதையாவது செய்வதுதானே வழமை.
தமிழில் வெளியாகின்ற படங்களை தெலுங்கில் மொழிமாற்றி அவ்வப்போது வெளியிடுவது வழமை. விஜய், விசால், சூர்யா, அஜித் போன்றவர்களின் படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பிருக்கிறது. ஆகையினால் இவர்களின் படங்களை தெலுங்கில் மொழிமாற்றி வெளியிடுவதற்கு தயாரிப்பாளர்கள் எப்பொழுதும் தயாராகவே இருப்பார்கள்.
இந்நிலையில்தான் விசாலின் 'தீராத விளையாட்டு பிள்ளை' படமும் விஜயின் 'வேட்டைக்காரன்' படமும் எதிர்வரும் மார்ச் 5ஆம் திகதி தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளன. ஒரே நேரத்தில் இரண்டு பெரிய கதாநாயகர்களின் படங்கள் வெளிவருவதால் இருவரது ரசிகர்களுக்குமிடையில் பாரிய போட்டி நிலவும் என தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.
தீராத விளையாட்டு பிள்ளை – 'கில்லாடி' என்ற பெயரிலும், வேட்டைக்காரன் - 'புலி வேட்டா' என்ற பெயரிலும் தெலுங்கு பதிப்பாக வெளிவருகிறது. விசாலுக்கும் விஜய்க்குமிடையிலான இந்த மோதல் எங்கே போய் முடியுமென்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

14 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago