2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

'நான் ரொம்ப கெட்டவன்' - அஜித்

Menaka Mookandi   / 2011 ஜூலை 18 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அண்மையில் வெளிவரவுள்ள திரைப்படம் 'மங்காத்தா'. அஜித் நாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தின் கதையையும் அஜித்துக்கான கதாபாத்திரத்தையும் மிகவும் இரகசியமாகவே பேணிப் பாதுகாத்து வந்தார் வெங்கட் பிரபு. ஆனால் தற்போது படத்துக்கான அஜித்தின் கதாபாத்திரம் அஜித் மூலமாகவே கசிந்துள்ளது.

ஆம், 'மங்காத்தாவில் தான் மிகவும் மோசமானவனாக நடிப்பதாகவும் அத்துடன் எதிர்மறையான ஐந்து கதாபாத்திரங்கள் அப்படத்தில் உள்ளதாகவும்' தல அஜித் தகவல் வெளியிட்டுள்ளார்.

தனது 50ஆவது திரைப்படமான 'மங்காத்தா'வை அதன் இயக்குனர் வெங்கட் பிரபு, மிகவும் சிறப்பாக உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ள அஜித், வெங்கட்பிரபுவின் அர்ப்பணிப்பு, மற்றும் முயற்சி அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை எடுத்துக்காட்டியுள்ளதாகவும் இதனால் தான் மிகவும் சந்தோஷமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தயாநிதி அழகிரியின் 'கிளவுட் நைன் மூவீஸ்' தயாரிப்பில் வெளிவரவுள்ள 'மங்காத்தாவில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும் மிகவும் சிறப்பாக தங்களது நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்கள் எனவும் அவர்கள் அனைவரது பங்களிப்பும் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு உருதுணையாக இருக்கும் என்றும் அஜித் கூறியுள்ளார்.

'என் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றிக்கொடி நாட்டிய திரைப்படங்களான தீனா மற்றும் பில்லா போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா, மங்காத்தாவுக்காகவும் சிறந்த இசையை வாரி வழங்கியுள்ளார்.

அவரது இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும் என்பதில் சந்தேகமே இல்லை. மங்காத்தா திரைப்படத்தின் வெளியீட்டை நான் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்' என்று தல அஜித் மேலும் கூறியுள்ளார்.


  Comments - 0

 • jone Tuesday, 26 July 2011 04:01 AM

  OPENING IS GOOD BUT FINSHING IS BAD

  Reply : 0       0

  saji Friday, 29 July 2011 10:48 PM

  we will see...................

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--