2021 ஜனவரி 27, புதன்கிழமை

நயனால் கடுப்பான பிரபுதேவா...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 18 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


'கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்' என்ற திரைப்படத்தை மும்பையில் விளம்பரப்படுத்த ராணா மற்றும் நயன்தாரா மும்பை வரும்போது அங்கிருந்து வெளியேற தீர்மானித்துள்ளாராம் பிரபுதேவா.

ராணா, நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள தெலுங்கு திரைப்படம் 'கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்'. நயன்தாரா படுகவர்ச்சியாக நடித்துள்ள இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்த கதாநாயகம் மற்றும் கதாநாயகி ஆகியோர் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்கிறார்களாம். மேலும் இத்திரைப்படத்தை இந்தியில் டப் செய்து வெளியிடும் திட்டமும் உள்ளது என்று கூறப்படுகிறது.

அதனால் ராணா, நயன்தாரா மும்பை செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ராணாவும், நயனும் நல்ல நண்பர்களாகிவிட்டனராம். இந்நிலையில் அவர்கள் மும்பை வரும்போது அங்கிருந்து வெளியேறி வேறு எங்காவது செல்லத் திட்டமிட்டுள்ளாராம் பிரபுதேவா.

நயன்தாராவைப் பிரிந்த பிறகு பிரபுதேவா மும்பையில் தங்கி இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

 • yasir Sunday, 02 December 2012 03:03 AM

  பாவம் பிரபு தேவா....
  அவரின் முகம் வாடி
  வளர்த்த தாடி
  தளர்த்த நாடி,.....(யாசிர்_),

  Reply : 0       0

  raml Saturday, 15 December 2012 04:25 PM

  குற்றமுள்ள மனம்?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .