2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

ஓடி ஒளிகிறார் அமலா போல்...

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


வீரசேகரன், சிந்து சமவெளி, மைனா போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தபோது ஊடகங்களைத் தேடி ஓடிக்கொண்டிருந்த நடிகை அமலா போல், இன்று ஊடகம் என்ற பெயர் கேட்டாலே ஓடி ஒளிந்துகொள்கிறாராம்.

ஏன் என்ன காரணம்? என்று அவரைக்கேட்டால், என்னை சந்திப்பவர்கள் ஒருவர்கூட நான் என்னென்ன திரைப்படங்களில், எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்கிறேன் என்று கேட்பதில்லை. வந்த வேகத்தில இயக்குநர் விஜய்யை நான் காதலிப்பதாகச் சொல்லி, அந்த காதல் எப்போது கல்யாணத்தில் முடியப்போகிறது என்றுதான் கேட்கிறார்கள்.

தெய்வத்திருமகள் என்ற ஒரு திரைப்படத்தில்தான் அவருடைய படத்தில் நடித்தேன். அதன்பிறகு இப்போது விஜய் சார் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இதற்கிடையே ஓரிரு முறைதான் நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஆனால் நாங்கள் ரகசியமாக காதலிப்பதாக செய்தி எழுதுகிறார்கள். இப்போது கல்யாணம் வரை வந்து விட்டார்கள்.

இயக்குநர் விஜய்யுடன் நான் கொண்ட நட்பை இப்படி காதல் கீதல் என்று கொச்சைப்படுத்துவது மனதுக்கு ரொம்ப வேதனையாக உள்ளது. அதனால்தான் சமீபகாலமாக ஊடகங்களை சந்திக்க பிடிக்கவில்லை. விழாக்களுக்கு செல்லும் இடங்களில்கூட யாராவது ஊடகவியலாளர்கள் வந்திருந்தால், ஓடி ஒளியும் மனநிலையில் இருக்கிறேன்' என்கிறார் அமலா போல்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .