2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

எங்க வீட்டு பிள்ளை விஜய்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


எங்க வீட்டு பிள்ளை படத்தின் ரீமேக்கில் இளைய தளபதி விஜய் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தினை விஜய்யை வைத்து ரீமேக் செய்ய இயக்குநர் செல்வபாரதி திட்டமிட்டு உள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது கத்தி படத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் நெருங்கிய நண்பரான  இயக்குனர் செல்வபாரதி ஏற்கனவே. 'நினைத்தேன் வந்தாய்', 'ப்ரியமானவளே', 'வசீகரா' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

எம்.ஜி.ஆர் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற 'எங்க வீட்டு பிள்ளை' படத்தினை, எம்.ஜி.ஆர் நடித்த வேடத்தில் விஜய்யை நடிக்க வைத்து இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் இயக்குநர் செல்வபாரதி. இது தொடர்பாக விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் விரைவில் இது தொடர்பிலான ஏனைய விபரங்கள் வெளியிடப்படவுள்ளன.
  Comments - 0

  • madu Monday, 26 May 2014 03:57 AM

    இவன் எல்லாம் ஒரு நடிகன்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X