George / 2015 பெப்ரவரி 01 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஜீத்துக்கும் விஜய்க்கும் நான் வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்வது தவறு. அவர்கள்தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தார்கள் என்று இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அவரே நடித்து இசையமைத்து வந்துள்ள பதிய திரைப்படம் இசை. இந்த திரைப்படம் வெளியானது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், அஜீத், விஜய் பற்றியும் கூறியுள்ளார்.
அதில், 'எல்லாரும் அஜீத், விஜய்க்கு நான் வாழ்க்கை கொடுத்ததாக சொல்கிறார்கள். எனக்குதான் அவர்கள் இரண்டு பேரும் வாழ்க்கை கொடுத்தார்கள். அதில் விஜய் எவ்வளவு பெரிய ஹீரோ... இன்னும் எனக்காக அவர் மனசுல இவ்வளவு பெரிய இடம் கொடுத்திருப்பார் என்று நான் நினைக்கவே இல்லை.
இத்தனை வருஷம் கழிச்சு ஒரே வார்த்தையில் நான் 10 வருடங்கள் சினிமாவில் இல்லை என்பதை மக்கள் மறப்பதை போல செய்துவிட்டார். நான் கடந்து வந்த பாதைக்கு முதல் விதை போட்டவர் அஜீத். நல்ல மனுஷன் இப்போது கொஞ்ச நாட்களாக தன்னை தனிமை படுத்திக்ககொண்டுள்ளார்.
அவரு அலைபேசியும் பாவிப்பது இல்லை. மின்னஞ்சல் அனுப்பியிருக்கின்றேன் என்னோட டிரெய்லரை அஜீத் பார்த்திருப்பார் என நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
15 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
3 hours ago