Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை ஐஸ்வர்யாராய் நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படபிடிப்பு இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
ஐஸ்வர்யாராய், 2010ஆம் ஆண்டு வெளியான குஷாரிஷ் என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. மகள் ஆரத்யாவை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். நிறைய திரைப்பட வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை. உடம்பும் எடை அதிகரித்தது.
இந்த நிலையில் ஹிந்தி இயக்குநர் சஞ்சய் குப்தா சமீபத்தில் ஐஸ்வர்யாராயை அணுகி ஒரு கதை சொன்னார்.
அது ஐஸ்வர்யாராய்க்கு பிடித்து போனது. நடிக்க சம்மதித்தார். இதையடுத்து கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்துள்ளார். அவர் நடிக்கும் திரைப்படத்துக்கு 'ஜஸ்பா'' என பெயரிட்டுள்ளனர்.
இதன் படப்பிடிப்பு மும்பையில் இன்று காலை ஆரம்பமாகியது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் உள்ள திரைப்படமாக இது தயாராகிறது.
இந்த திரைப்படத்தில் ஐஸூக்கு வழக்கறிஞர் வேடமாம். அதனால் அதற்கான பயிற்சிகள் எடுத்து தன்னை தயார்படுத்தி உள்ளாராம்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago