2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

அஞ்சலியை கலாய்த்த அப்பாடக்கர்கள்

George   / 2015 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகலகலா வல்லவன் திரைப்படத்தில் அஞ்சலியின் உருவம் பப்ளிமாஸ் போன்று இருந்ததால் அவருக்கு வேண்டப்பட்ட சில அபிமானிகள், இதென்ன சொர்ணாக்கா மாதிரி இருக்கு என்று வாட்ஸ் அப்பில் அவரை கிண்டல் செய்தார்களாம். அது அஞ்சலியை பெருங்கோபத்துக்கு ஆளாக்கி விட்டதாம்.

அதையடுத்து, அந்த திரைப்படத்துக்கு எடை அதிகப்படுத்த வேண்டும் என்று இயக்குநர் சுராஜ்தான் கேட்டுக்கொண்டார். அதனால்தான் இந்த திரைப்படம் முடிகிற வரைக்கும் அதையே அப்படியே தொடர்ந்தேன். கதைக்காக என்னை முழுமையாக மாற்றிக்கொண்டது தவறா? என்று அவர்களுக்கு உடனடியாக அவசர செய்தி அனுப்பியுள்ளார் அஞ்சலி. 

அதோடு, சகலகலா வல்லவனின் பார்த்து வேறு அஞ்சலி. ஆனால் இப்போது இறைவியில் நடித்து வரும் அஞ்சலியைப் பாருங்கள், இவள்தான் இப்போதைய ஒரிஜினல் அஞ்சலி என்று சொல்லி இறைவி திரைப்படத்துக்காக எடையை குறைத்து ஸ்லிம்மாக தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அனுப்பி அவர்களை ஆச்சரியப்படுத்தி விட்டாராம் அஞ்சலி.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .