2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

நயன், ஹன்ஸியை வளைத்துப்போட்ட ஜீவா

George   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்பெல்லாம் கதாநாயகிகள் விடயத்தில் அவ்வளவாக கவனம் செலுத்தாத நடிகர் ஜீவா, தற்போது முன்னணி கதாநாயகிகளுடன் மட்டும்தான் நடிப்பேன் என அடம்பிடிக்கின்றாராம்.

அண்மைகாலமாக தனது மார்க்கெட் மந்தமாக இருந்து வருவதால் தான் அவர் இந்த முடிவுககு வந்துள்ளதுடன் முன்னணி நடிகைகளுடன் கூட்டணி அமைத்தால் வெற்றிக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்று நினைக்கிறாராம்.

திருநாள் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒரு இளவட்ட நடிகையிடம் ஏற்கனவே பேசி வைத்திருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தங்களது சூப்பர் குட் பிலிம்ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்த நயன்தாராவை மீண்டும் அணுகினார். 

ஏற்கெனவே பேசி வைத்திருந்த திரைப்படம் கிடப்பில் போடப்பட்டதால், அந்த கால்சீட்டைத்தான் இப்போது பயன்படுத்துகிறோம் என்று சொல்லி நயன்தாராவை சம்மதிக்க வைத்துள்ளார். வேறுவழியில்லாமல் நயன்தாராவும் அதற்கு கட்டுப்பட்டார்.

அட்வான்ஸ் பழசாக இருந்தாலும், புதிய சம்பளத்துடன் திருநாள் திரைப்படத்தில் ஆசிரியை வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் நயன்தாரா. இந்நிலையில், அடுத்தபடியாக தான் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் நடிக்கிறார் ஜீவா. மேல்தட்டு ஹீரோக்களுடன் மட்டும்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வந்த ஹன்சிகாவுக்கு தற்போது போதுமான திரைப்படங்கள் இல்லாததால் உடனே ஓகே சொல்லி விட்டாராம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .