2021 மார்ச் 06, சனிக்கிழமை

நெருங்கி வந்த சிம்பு

George   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெருங்கிய நண்பனுக்கு பிறந்த நாள் என்றாலோ, அல்லது காதலிக்கு பிறந்த நாள் என்றாலோதான் நம்மவர்கள் அவர்கள் பிறந்த நாளின் முதல் விநாடியில் அதாவது சரியாக 12:00 மணிக்கு வாழ்த்து சொல்ல ஆசைப்படுவார்கள். 

சினிமாவில் இப்படிப்பட்ட காட்சிகளை பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். நம்முடைய நண்பர்களுக்கோ, காதலிக்கோ பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் போது கூட அந்த அளவுக்கு நொடி மாறாமல் நம்மால் வாழ்த்து சொல்ல முடியுமா என்பது சந்தேகமே. நம் மனம் கவர்ந்தவர்களுக்கு மட்டுமே நாம் இப்படிப்பட்ட ஒரு வாழ்த்தைத் தெரிவிப்போம்.

அப்படி ஒரு வாழ்த்தை ஹன்சிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிம்பு நேற்று தெரிவித்திருக்கிறார். நேற்று 9ஆம் திகதி பிறக்கும் அந்த நள்ளிரவு 12 மணித்துளிகளில் சிம்பு, ஹன்சிகாவுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

'இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், இனிமையான ஆண்டாக அமையட்டும், கடவுள் அருள் கிடைக்கட்டும்,' என சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். விடியற்காலை 5 மணிக்கு பின்னர் ஹன்சிகா அதற்கு நன்றி சிம்பு என நன்றி தெரிவித்துள்ளார். 

சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக அறிவித்து, பின்னர் பிரிந்து விட்டார்கள். அதன் பின் வாலு திரைப்படத்துக்காக ஒரு பாடல் எடுக்க வேண்டி இருந்த நிலையில் மீண்டும் இணைந்து பணிபுரிந்தார்கள். இப்போது சிம்பு சரியாக 12 மணிக்கு வாழ்த்துச் சொல்லியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வாழ்த்தில் இருப்பது, நட்பா, காதலா ? சிம்புவுக்கே வெளிச்சம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .