2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

அஜித்தின் 50ஆவது படத்தில் நீத்து சந்திரா

A.P.Mathan   / 2010 ஜூலை 16 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கௌதம் மேனன் இயக்குவதாக இருந்த அஜித்தின் 50ஆவது படம் இப்பொழுது வெங்கட் பிரபு கைக்கு மாறியிருக்கிறது. 'மங்காத்தா' என அப்படத்திற்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள். வழமையான வெங்கட் பிரபுவின் குழுவினரே மங்காத்தாவிலும் பணியாற்றவுள்ளனர். யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அஜித்தின் ஜோடியாக முன்னர் அனுஷ்காவை தெரிவுசெய்திருந்தனர். ஆனால் அவரது உயரம் அதிகம் என்பதால் அவரை நீக்கிவிட்டு நீத்து சந்திராவை புதிதாக தெரிவுசெய்திருக்கிறார்கள். நீத்து சந்திரா ஏற்கனவே மாதவனின் 'யாவரும் நலம்' திரைப்படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமாகியிருந்தார்.

மிகவிரைவில் மங்காத்தா படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .