Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 மே 29 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சதொச கிளைகள் ஊடாகவும் சதொச களஞ்சியச்சாலைகள் மூலமும், அத்தியாவசியப் பொருட்களையும் ஏனைய உலருணவுப் பொருட்களையும் விநியோகிப்பதற்கு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பிலான ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும், அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள அரசாங்க அதிபர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கவென, அவர்களுக்குத் தேவையான பொருட்களை அரசாங்க அதிபர்களும், பிரதேச செயலாளர்களும், சதொசவில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சதொச தலைமையகத்திலும் சதொச கிளைகளிலும், மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்குத் தேவையான பொருட்களை, அரச உயரதிகாரிகள் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் கருதி அவற்றை விநியோகிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிப்புக்குள்ளானவர்கள், தமக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை, அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளரிடம் தெரிவிக்க முடியும். இதன்போது, அரச உயரதிகாரிகள் ஊடாக, அந்தப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
43 minute ago