2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரத்திலிருந்து தமிழ் அரசியல் கைதி இடமாற்றம்

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  தமிழ் அரசியல் கைதிகள், நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், நிலையில்,  குறித்த   8 கைதிகளுள் ஒருவர், நேற்று இரவு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிவசுப்ரமணியம் தில்லைராஜா என்ற கைதியே இவ்வாறு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்,இவர்  கடந்த 8 வருடங்களாக, அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாலேயே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளார்

இதேவேளை, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, கைதிகளைப் பார்வையிடுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், வட மாகாண சபை உறுப்பினர் கே. சாந்தன் ஆகியோர் நேற்று அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தனர்.

இதன்போது, குறித்த கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும், இத்தனை வருடங்களாக தமது விடுதலைக்காகக் காத்திருப்பவர்கள் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்குமாறு கைதிகளிடம் தெரிவித்து, உண்ணாவிரதத்தை கைவிடுமாறும்   நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வலியுறுத்திய போதிலும், கைதிகள் அதற்கு இணங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--