Kanagaraj / 2016 ஜூலை 15 , மு.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
றகர் வீரர் வசீம் தாஜுதீனின் கொலையில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் முன்னாள் மேல் மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜீ) அநுர சேனநாயக்கவுக்குப் பிணை கோரி, அவரது சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, ஜூலை 18ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தாஜுதீனின் கொலையை மறைக்க முயன்றார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சேனநாயக்க, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, ஜூலை 20ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாஜுதீன் கொல்லப்பட்ட அன்று காலை, நாரஹேன்பிட்ட சாலிகா விளையாட்டு அரங்குக்கு அண்மையில் முன்னாள் பிர-திப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க காணப்பட்டதற்குச் சாட்சியுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது. மேலும், அநுர சேனாநாயக்க, சாட்சியங்களை மறைத்தார்ƒ கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டினார் என்று நிரூபிப்பதற்கு போதியளவான சாட்சியங்கள் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறினர்.
36 minute ago
51 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
51 minute ago
55 minute ago
1 hours ago