2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

அனோமா பொன்சேகாவுக்கு மரியாதை செலுத்திய இராணுவ வீரர் இடமாற்றம்

Super User   / 2010 ஜூன் 17 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவியான அனோமா பொன்சேகாவுக்கு மரியாதை  செலுத்திய இராணுவ வீரர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு அருகில் அமைந்துள்ள இராணுவ நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்துவதற்காக அனோமா பொன்சேக்கா சென்றிருந்த போதே அவருக்கு குறித்த வீரர் மரியாதை செலுத்தியுள்ளார். 
 
சல்யூட் அடித்து மரியாதை செய்யும் புகைப்படம் அண்மையில் ஊடகங்களில் வெளியானைதை அடுத்து அவர் தொடர்பில் விசாரணை நடத்தியுள்ள பாதுகாப்பு அமைச்சிடம்  முன்னாள் இராணுவத் தளபதியின் மனைவி என்ற வகையில் அவருக்கு மரியாதை செய்வது இராணுவ நடைமுறை என்பதால் தாம் அவருக்கு மரியாதை செலுத்தியதாக மேற்படி இராணுவ வீரர் கூறியுள்ளார்.

இந்நிலையில் குறித்த வீரரை உடனடியாக வேறொரு மாவட்டத்துக்கு மாற்றம் செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவு  பிறப்பித்துள்ளது.

இதேவேளை இந்த இராணுவ வீரரின் இடமாற்றத்தை உறுதி செய்த இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க, மேற்படி இடமாற்றத்துக்கும் அனோமா பொன்சேகாவுக்கு மரியாதை செலுத்தினார் என்ற சம்பவத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.

குறுகிய மனப்பான்மையினைக் கொண்டவர்களே இவ்விரு சமபவங்களையும் தொடர்புபதுத்திக் கதைக்கின்றார்கள் என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--