2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தேசிய வடிவமைப்பு சபையின் கலந்துரையாடல்

Super User   / 2010 ஜூன் 23 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய வடிவமைப்புச் சபையின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலப் பணிகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், நேற்று கொழும்பு மருதானை வீதியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது.

மேற்படி தேசிய வடிவமைப்புச் சபையின் செயற்பாடுகள் உரிய முறையில் கைத்தொழிலாளர்களை சென்றடையும் வகையில் பணிகள் விஸ்தரிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து டக்ளஸ் தேவானந்தா இதன்போது ஆலோசனை வழங்கினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--