2021 மே 08, சனிக்கிழமை

அமெரிக்காவின் உதவியைக் கோரி ஊர்வலம்

Editorial   / 2017 ஜூன் 03 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், இன்று  மதியம் ஊர்வலமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, வீதி அபிவிருத்தி  அதிகாரசபைக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், இன்று 100 ஆவது நாளை அடைந்துள்ளது.

இதனை முன்னிட்டு, வவுனியா கந்தசாமி கோவிலில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அங்கிருந்து பசார் வீதி ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தானை வீதியை அடைந்து, அதனூடாக கண்டி வீதிக்கு சென்று தமது போராட்ட தளத்தை வந்தடைந்தனர்.

ஊர்வலத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அமெரிக்காவின் தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் “தமிழர்களாகிய நாம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை நாடுகிறோம், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தனது உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும், தமிழர் தாயகத்துக்கு வந்து அமெரிக்கா எப்போதும் உதவியளிக்க வேண்டும், எமக்கு அமெரிக்கா மட்டுமே நீதியை பெற்றுத் தர முடியும்” என, அமெரிக்காவின் இலட்சினை பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்ததுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவைக் கோரிய கொடியும் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை, தமக்கு நீதி கிடைக்கும் வரை இப்போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X