2021 ஜனவரி 16, சனிக்கிழமை

அமெரிக்காவும் வாழ்த்து

Editorial   / 2019 நவம்பர் 18 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக முறையில் ஜனாதிபதியொருவரைத் தெரிவு செய்துள்ள இலங்கை மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பீ டெப்ளிஸ் அறிவித்துள்ளார்.

இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள கோட்டாபய
ராஜபக்‌ஷவுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக, அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில், தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர், புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபயவுடன் இணைந்துப் பணியாற்ற, அமெரிக்க எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பலமிக்கதும் இறையாண்மையுடனானதுமான இலங்கைக்கு உதவுவதோடு, நல்லாட்சி, பொருளாதார அபிவிருத்தி, மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றையும் அவற்றோடு இணைந்த விடயங்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்கத் தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அமெரிக்கத் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .