2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

‘அரசாங்கமே பின்புலத்தில் ஆதாரங்களை வெளியிட்டது எதிரணி’

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

‘ஜனபலய’ எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு, நஞ்சு கலந்த பால் பக்கற்றுகளை வழங்கியதாகக் கூறப்படும் சம்பவத்துக்குப் பின்புலத்தில், அரசாங்கம் இருப்பது அம்பலமாகியுள்ளது எனத் தெரிவித்துள்ள ஒன்றிணைந்த எதிரணியினர், அதற்கான ஆதாரங்கள் இதுவே என்று, வான் ஒன்றின் புகைப்படம் மற்றும் காணொளி ஒன்றையும் வெளியிட்டார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் அமைச்சுக்குக் கீழாக இயங்கும் தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான ND-3094 என்ற இலக்கத்தகடு பொருத்தப்பட்ட வான் ஒன்றிலேயே, குறித்த மில்கோ பால் பக்கற்றுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, இதன்போது எதிரணியினர் தெரிவித்தனர்.

பொரளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில், நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, இந்தப் புகைப்படம் மற்றும் காணொளி தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த, எம்.பி ஷெஹான் சேமசிங்க, இச்சம்பவம் நடைபெற்று 5 நாட்கள் கடந்துள்ள போதிலும் குறித்த மில்கோ நிறுவனம் மற்றும் நிறுவனத்துக்குப் பொறுப்பான அமைச்சர் விஜித் விஜயமுணி சொய்சா ஆகியோர், தொடர்ந்து இது தொடர்பில் மௌனம் காப்பது, தமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்று கூறினார்.

எனவே, இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு, அமைச்சர் விஜித் விஜயமுணி சொய்சாவுக்கு இருப்பதாகவும் அவ்வாறு மேற்கொள்ள முடியாவிட்டால், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஜனபலய எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துக்கொள்பவர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் மரிக்கார் எம்.பி ஆகியோர் மீதும், இச்சம்பவம் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--