2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

‘அரசின் கண்டுகொள்ளாமை இருப்பை நிச்சயமற்றதாகிவிடும்’

Editorial   / 2017 மே 25 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

“முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தேறிவரும் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக, அரசாங்கம் மீது பல்வேறுவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலை நீடிக்குமானால் இந்த அரசாங்கத்தின் இருப்பும் தலைவிதியும் நிச்சயமற்றதாகிவிடும் என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.   

கொழும்பு அழகியல் கலையரங்கத்தில்,செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“சமயத் தலைவர்கள் என்று கூறிக்கொண்டு குழப்பங்களை விளைவிப்போர் யாராக இருந்தாலும், சாதாரண பொதுமக்களுக்கு செல்லுபடியாகும் நீதி வரையறைகளுக்குள்ளேயே அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.   

நாட்டில் உளவுத்துறை என்று ஒன்று இருக்கின்றது. உளவுத்துறைக்கு தெரியாமல் எதுவும் நடக்க முடியாது. இந்த நாட்டின் கொடூர பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த உளவுத்துறைக்கும், இராணுவத்துக்கும், பொலிஸுக்கும் இந்த குழப்பக்காரர்கள் பற்றி முன்கூட்டியே தெரியாது என்று கூறுவதற்கு எந்த சாக்குப்போக்கும் சொல்லமுடியாது.   

அப்படிச் சொல்வதானால் அது நாட்டின் உளவுத்துறைக்கும் இராணுவத்துக்கும், பொலிஸுக்கும் இழைக்கின்ற மிகப்பெரிய நிந்தனையாகும்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .